மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக “நம்பர் பிளேட்” பொருத்தினால் நடவடிக்கை..! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!

Photo of author

By Parthipan K

வாகனங்களில், மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக நம்பர் பிளேட் பொருத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னையில் சமீப காலமாக வாகனங்களில் உள்ள நம்பா் பிளேட், மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பின் புதிதாக வாகனப் பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும்.

அனைத்து வகை வர்த்தக வாகனங்களின், நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்திலும், எழுத்து கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். முன்னும் பின்னும் இரண்டு வரிசையில் வாகன பதிவு எண் இருக்க வேண்டும். அனைத்து தனியார் வகை வாகனங்களின் நம்பர் பிளேட்டின் நிறம் வெள்ளை நிறத்திலும், எழுத்து கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும்.

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு, இடைவெளி என அனைத்தும் மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். இதனை பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட்டின் விதிமுறைகள்:

*அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில்,
எழுத்தின் உயரம் – 35 மி.மீ.
அகலம் – 7 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 5 மி.மீ.

*70 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் முன்பக்கம் நம்பர் பிளேட்டில்,
வாகனப் பதிவு எண் உயரம் – 15 மி.மீ.
அகலம் – 2.5 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 2.5 மி.மீ.

*மூன்று சக்கர பயனற்ற வண்டிகளின் நம்பர் பிளேட்டில்,
பின் பக்கம் எழுத்தின் உயரம் – 40 மி.மீ.
அகலம் – 7 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 5மி.மீ.

* 500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டில்,
முன் மற்றும் பின் பக்கம் எழுத்தின் உயரம் – 35 மி.மீ.
அகலம் – 7 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 5 மி.மீ.

* 500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டில்,
முன் மற்றும் பின் பக்கம் எழுத்தின்  உயரம் – 40 மி.மீ.
அகலம் – 7 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 5 மி.மீ.

* மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில்,
முன் மற்றும் பின் பக்கம் எழுத்து உயரம் – 65 மி.மீ.
அகலம் – 10 மி.மீ.
நம்பருக்கு இடையே இருக்கும் இடைவெளி – 10 மி.மீ. இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.