ஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி

0
151

ஆர்.கே.நகருக்கு இப்படி ஒரு சோதனையா? திரையுலகம் அதிர்ச்சி

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் படம் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிகமான திரையரங்குகளில் அவரது படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தயாரித்த ஒரு படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் படம்தான் ஆர்கே நகர்

ஆர்கே நகர் படத்தை தயாரித்த வெங்கட்பிரபு அதனை ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறார். இருப்பினும் அந்த படத்தை அவரால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து தற்போது அவர் அந்த படத்தை நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கான விளம்பரமும் தற்போது நெட்பிளிக்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் நிலையில் அந்தப் படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு பெரிய இயக்குனர் தயாரித்த படத்திற்கே இந்த நிலை என்றால் மற்ற சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் நிலை என்ன என்பதே தற்போதைய கோலிவுட் திரையுலகினர்களின் கேள்வியாக உள்ளது. வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் தயாராகியுள்ளது.

Previous articleபாய்ந்த அமைச்சர்! பதுங்கிய எதிர்க் கட்சித் தலைவர்! வழக்கம் போல முட்டு கொடுத்த கழக நிர்வாகி
Next articleஎங்களை குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம் யார் சொன்னது தெரியுமா?