வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்!

0
195

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்துக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்தது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

அதையடுத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான நடிகர் அருண் விஜய் அதிலிருந்து வெளியேறினார். அவர் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்துவதால் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த வில்லன் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அரவிந்த் சாமி சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Next articleதமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் முழு அடைப்பு:! அரசின் அதிரடி உத்தரவு!!