மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

Photo of author

By CineDesk

மதுபாட்டிலில் விஷப்பூச்சி.. அதிர்ச்சியில் உறைந்த மதுப்பிரியர்கள்!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரபரப்பு சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பூரான் இருந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.

டாஸ்மாக்-கில் மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்கிய நிலையில் அதில் பூரான் என்ற விஷப்பூச்சி இருப்பதைக் கண்டுப் பிடித்துள்ளார்.

பாட்டிலில் இருந்த பூரானை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பிய நிலையில் டாஸ்மாக்-கின் உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் கூறி உள்ளனர். சைனாவில் இதை உணவாக மக்கள் எடுத்து கொள்கின்றன என்று சமாதானம் கூறி வேறு மது பாட்டிலை மாற்றி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் உரிமையாளர்கள் அலட்சியமாக பேசியதால் மதுப்பிரியர் கோவம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி குற்றம் சாற்றுவேன் என்று மது பாட்டிலுக்குள் இருந்த பூரானை காட்டி அவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.

இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வீடியோ-வில் கூறி உள்ளார்.