புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

0
76

புஜாராவா இது…? 20 பவுண்டரிகள், 6 சிக்ஸரோடு அதிரடி சதம் விளாசி அசத்தல்

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா சமீபகாலமாக மோசமான பார்மில் இருந்து வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு டிராவிட்டுக்குப் பிறகு சுவராக இருந்து வருபவர் புஜாரா. ஆனால் சமீபகாலமாக அவர் ஸ்கோர்களை குவிக்க முடியாமல் தினறவே அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை சர்ரேவுக்கு எதிரான ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் கேப்டன் சேதேஷ்வர் புஜாரா தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். அவர் 131 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 174 ரன்கள் எடுத்தார். இது இப்போது புஜாராவின் சிறந்த லிஸ்ட் ஏ ஸ்கோர் ஆகும். சசெக்ஸ் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 378 ரன் குவித்தது.

இந்த போட்டிக்கு முன்பாக வெள்ளிக்கிழமை வார்விக்ஷயர் அணிக்கு எதிராக புஜாரா 79 பந்துகளில் 107 ரன்களை குவித்து சதம் அடித்து இருந்தார். அந்த போட்டியின் 45வது ஓவரில் லியாம் நார்வெல் பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாச அவர் 22 ரன்களை எடுத்தார். வழக்கமாக நிதானமான ஆட்டத்தை மேற்கொள்ளும் புஜாரா இந்த தொடரில் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருகிறார்.

இந்த தொடரில் புஜாரா 13 இன்னிங்ஸ்களில் 109.40 சராசரியில் 1094 ரன்கள் எடுத்து இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சீசனில் அவர் பெற்ற ஐந்து சதங்களில் மூன்று இரட்டை சதங்களை உள்ளடக்கியது.