திருமணமான தம்பதியருக்கு நண்பர்கள் கொடுத்த வேற லெவல் கிப்ட்!
இனி புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இப்படிப்பட்ட அன்பளிப்பு கொடுத்தால் அவர்களின் அன்றாட செலவை குறைக்க முடியும்.இந்த காலத்தில் விலைவாசி ஏறிய நிலையில் பெட்ரோல்,டீசல்,மற்றும் வெங்கயாம்,LPG சிலிண்டர் எனத் தொடங்கி அனைத்தின் விலையும் ஏறியுள்ளது.இந்நிலையில் பெட்ரோலின் விலை இன்று சென்னையில் ரூபாய் 98 ஆக விற்பனையாகியுள்ளது.
இதனையடுத்து சென்னையிலுள்ள மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் அழித்த அன்பளிப்பு அனைவரையும் வியப்படைய செய்தது.மதுரவாயலிலுள்ள தனியார் மண்டபத்தில் சரண்யா,கார்த்தி என்பவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புதுமண தம்பதிகளுக்கு அவர்களது நண்பர்கள் விலைவாசி ஏறிய பொருட்களான LPG சிலின்டர்,5 லிட்டர் பெட்ரோல் மற்றும் வெங்காயம் கோர்த்த மாலை என அனைத்தையும் அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வித்தனர்.
மணமக்களுக்கு கொடுத்த இந்த அன்பளிப்பு விலைவாசியின் மதிப்பை அனைவருக்கும் எடுத்துகூறும் வகையில் இருந்தது.இதனையடுத்து இதன் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.