உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!!

Photo of author

By Sakthi

உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 16ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்(ஹிந்தி) இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் டோலிவுட்(தெலுங்கு) நடிகர் பிரபாஸ் நடிப்பில்  ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் 16ம் தேதி பேன் இந்தியா படமாக 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன் சீதா தேவி கதாப்பாத்திரத்திலும், நடிகர் பிரபாஸ் இராமர் கதாப்பாத்திரத்திலும், நடிகர் சயிப் அலிகான் இராவணன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
3டி தொழில் நுட்பத்தில் அனிமேசன் முறையில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதையடுத்து ஆதி புருஷ் திரைப்படத்தில் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுத்துள்ளது. இதையடுத்து ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசனங்களை எழுதிய மனோஜ் முன்டாஷிர் சுக்லா அவர்கள் வசனங்களை மாற்றவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிபுருஷ் திரைப்படத்தின் டயலாக் ரைட்டர் மனோஜ் முன்டாஷிர் சுக்லா அவர்கள் “என்னை பொறுத்தவரை ரசிகர்களின் உணர்வுகளை விட பெரியது எதுவும் இல்லை. ஆதிபுருஷ் திரைப்படத்தில் தற்போது இருக்கும் நான் எழுதிய வசனங்களை என்னால் நியாயப்படுத்த முடியும். ஆனால் அது உங்கள் வலியை குறைக்காது. மேலும் வலியை அதிகரிக்கும்.
ஆதிபுருஷ் படத்தில் இருக்கும் உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்களை மாற்றுவது என்று படத்தயாரிப்பாளர், இயக்குநருடன் சேர்ந்து முடிவு செய்துள்ளேன். திருத்தப்பட்ட வசனங்கள் இந்த வாரத்தில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் சேர்க்கப்படும்” என்று அவர் கூறினார்.