4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

Photo of author

By Kowsalya

4 சொட்டு நல்லெண்ணையை உங்க சிறுநீரில் விடுங்கள்! நொடியில் உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம்!

பொதுவாக நாம் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது முதல் டெஸ்ட் ஆக சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார்கள். காரணம் நம் உடலில் உள்ள சிறுநீரும் ரத்தமும் நம் உடலில் எந்த மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்று காட்டிக் கொடுத்துவிடும்.

ஆனால் இதை வீட்டில் இருந்தே நாம் கண்டு பிடிக்கலாம். நான்கு சொட்டு நல்லெண்ணையை சிறுநீரில் விட்டால் போதும் என்ன நோய்? என்று சீக்கிரமாக கண்டுபிடித்து விடலாம்.

மூன்று விதமாக நாம் நம் உடலில் உள்ள நோய்களை அறியலாம்.எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று விஷயங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. இந்த மூன்றில் எது நமக்கு உள்ளது என்று தெரிந்தாலே அதற்கு ஏற்றவாறு எளிதாகவும் நமக்கு இருக்கும் நோய்களை குணப்படுத்திவிடலாம்.

எப்படி செய்வது:

இதனை நாம் காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரில் தான் கண்டுபிடிக்க முடியும்.

1. முதலில் ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது பௌலை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. உங்கள் சிறுநீரை அதில் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அதில் நான்கு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு ஓரமாக வைத்து விடுங்கள்.

4. அரை மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.

என்ன நோய்? எனக் கண்டறிவது எப்படி?

வாதம்: 

நீங்கள் எடுத்து வைத்துள்ள சிறுநீரில் நல்லெண்ணெய் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது.

பித்தம்

நீங்கள் எடுத்து வைத்துள்ள சிறுநீரில் எண்ணெய் கயிறு போல இல்லாமல் எண்ணெய் வட்ட வடிவில் மோதிரம் போன்று இருந்தால் உங்களுடைய உடலில் பித்த நோய் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது.

கபம்:

நீங்கள் எடுத்து வைத்துள்ள சிறுநீரின் மீது நீங்கள் விட்ட எண்ணெய் முத்துப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டிருந்தால் உங்களுடைய உடலில் கபம் அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தமாகிறது.

எண்ணெய் பரவினால்:

இந்த மூன்றுமே இல்லாமல் சிறுநீரில் நீங்கள் விடும் எண்ணெய் சிறுநீருக்குள் வேகமாகப் பரவிச் சென்று விட்டால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடும் தன்மை கொண்டிருக்கிறது.

எனவே உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன என்று இவ்வாறு கணித்து அதற்கேற்றவாறு உங்களது உடம்பை சரிசெய்து கொள்ளுங்கள்.