வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

0
131
#image_title

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர்.

இந்த விடுதலை படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் என்று ஏற்கனவே வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.முதல் பாகம் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்பொழுது விடுதலை பாகம் 2 உருவாகி வருகிறது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று விடுதலை பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தான் தற்பொழுது இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ப்யூர்சினிமா புத்தக அங்காடி என்ற கடையை தொடங்கி வைக்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் விடுதலை 2 ரிலீஸ் எப்பொழுது என்று செய்தியார்கள் கேட்டதற்கு “அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகும்.பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன” என்று தெரிவித்து இருக்கிறார்.

Previous articleஜவான் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இத்தனை கோடியா!!! அதிகாரப்பூர்வமான தகவல் இதோ!!! 
Next articleநடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்!!