உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இங்கு சொல்லப்பட்டுள்ள சித்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்.நிச்சயம் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தர்பூசணி
2)பீட்ரூட்
3)மாதுளை
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு தர்பூசணி கீற்றை எடுத்து தோல் நீக்கிகொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு மாதுளம் பழத்தை கட் செய்து பழ விதைகளை தனியாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பின்னர் மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள தர்பூசணி துண்டுகள்,பீட்ரூட் துண்டுகள் மற்றும் மாதுளை விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.இந்த ஜூஸை தினமும் இரவு நேரத்தில் பருகி வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.தாம்பத்தியத்தில் அதிக நேரம் ஈடுபட இந்த ஜூஸ் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கசகசா
2)ஜாதிக்காய்
3)பசும் பால்
4)தேன்
செய்முறை விளக்கம்:-
1.ஒரு தேக்கண்டி கசகசா மற்றும் ஒரு தேக்கரண்டி ஜாதிக்காய் தூளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த ஜாதிக்காய் கலவையை அதில் கொட்டி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
3.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.ஒரு கிண்ணத்தை எடுத்து வெந்தயம் ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
2.மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தாம்பத்தியத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாகும்.