பொங்கலுக்கு வெளியாகும் “விடா முயற்சி”, “குட் பேட் அக்லி”!!

Photo of author

By Vinoth

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்டேட் அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது படக்குழு அந்த வகையில் ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது படக்குழு “குட் பேட் அக்லி ” படத்தில் அஜித் கெட்டப் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது.

அதில் பில்லா படத்திற்கு பிறகு அஜித் அவர்களை புதிய லுக்கில் நடித்து இருக்கிறார். “குட் பேட் அக்லி ” படம் பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என கூறி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு இடையில் “விடா முயற்சி” படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தெரிவித்து இருக்கிறார். பெரும்பாலும் நடிகர் அஜித் படம் என்றால் வருடத்திற்கு இரண்டு அல்லது ஒன்று படம் மட்டுமே திரைக்கு வரும் இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.

அதை பூர்த்தி செய்யும் வகையில் “குட் பேட் அக்லி” படக்குழுவினர் படத்தின் அப்டேட்களை வெளியிட்டு வருவது மகிழ்ச்சி செயலாக   இருக்கிறது. அதில் “இப்படத்திற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. தேதியை விரைவில் அறிவிப்போம். தமிழில் எங்களது முதல் படம் இதுவாகும், எனவே பிளாக்பஸ்டராக இருக்கும் என நம்புகிறோம்” என தயாரிப்பாளர் நவீன் எர்னேனி கூறியுள்ளார். ஆனால் தற்போது பொங்கலுக்கு இரண்டு படம் வெளியாகும் என திரை துறையில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.