நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

Photo of author

By Kowsalya

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பெருகி வரும் நிலையில் ஹைதராபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அடிமையான ஒருவன் பெண்களுக்கு நடு இரவில் வீடியோ கால் செய்து தொந்தரவு செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த இவர் பெயர் துர்கா பிரசாத் இவன் ஆபாச படத்திற்கு அடிமையாகி பெண்களுக்கு நள்ளிரவில் வீடியோ கால் செய்துள்ளான்.இவன் சமூக வலைதளங்களில் பெண்களின் தொலைபேசி எண்களை எடுத்து அவருக்கு வாட்ஸ்ப்பில் பலவித ஆபாச படங்களை அனுப்பி உள்ளான்.

அனுப்பிவிட்டு வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்து வந்துள்ளான். அவ்வாறு போன் செய்து அவரது அந்தரங்க படங்களை கேட்டு மிரட்டியுள்ளான்.அதற்கு அவர்கள் இனங்காவிடில் அவரது புகைப்படங்களை ஆபாசமாக பாவித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு விடுவதாக மிரட்டியுள்ளான்.

இப்படியே செய்து கொண்டிருந்த துர்கா பிரசாத் ஒருநாள் பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் இந்த வேலையை பார்த்து உள்ளான்.அந்த பெண் வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

அப்பொழுது இவன் பல பெண்களுக்கு இந்த மாதிரியான வீடியோக்களை நள்ளிரவில் அனுப்பி பேசி வந்தது தெரியவந்தது.அதன்பின் அவன் மீது வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் போலீஸார் ரகசியமாகவும் விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைதளம் ஒன்றை அனைவரும் பயன்படுத்துகின்றோம். ஆனால் எதற்கு எதை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். பெண்களே உங்களது தொலைபேசி எண்ணை சமூக வலைத்தளங்களில் பதிவிடாதீர்கள் என காவல்துறையின் பெயரில் கேட்டுக்கொள்ளப்பட்டது.