நாக சைதன்யாவின் திருமணத்தின் போது சமந்தா வெளியிட்ட வீடியோ!!

0
101
Video released by Samantha during Naga Chaitanya's wedding!!
Video released by Samantha during Naga Chaitanya's wedding!!

நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவின் திருமணம் தெலுங்கு முறைப்படி டிசம்பர் 4 தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.

சமந்தா நாக சைதன்யா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்ஸ் படத்தில் நடித்த போது காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாகவும், சமந்தாவின் மையோசிடிஸ் நோயின் காரணமாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி பிரிந்தனர்.

சமந்தா சிங்கிளாக இருக்கும் நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவிற்கு இடையே ரகசிய டேட்டிங் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாக சைதன்யாவின் குடும்பம் ஒப்புக்கொண்ட நிலையில் இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட திரையுலக நடிகர்கள் மத்தியில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் சிரஞ்சீவி, எஸ். எஸ். ராஜமௌலி, ஞானி, டகுபதி, ராம்சரண் மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைதன்யா சோபிதா கழுத்தில் தாலி கட்டும் பொழுது சைதன்யாவின் தம்பி அகில் விசில் அடித்து ஆரவாரம் செய்தார். மேலும் தந்தை நாக அர்ஜுனா இத்திருமணத்தைப் பார்த்து பூரிப்படைந்தார். சைதன்யாவின் திருமணத்தின் போது மோதிரம் எடுக்கும் சடங்கில் மோதிரத்தை கண்டுபிடித்து திருமணத்திற்கு பின் தனது முதல் வெற்றி என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் இன்ஸ்டா பதிவு:

திருமணத்தின் போது சோபிதா சடங்கு செய்யும் போது அவரது அருகில் அவர்களது அம்மா,அப்பா உடன் தங்கை சமந்தாவும் அமர்ந்திருந்தார். இதனால் அவர்களது அப்பா கோபம் அடைந்தார். திருமணச் சடங்கு செய்யும் பொழுது தனது அப்பா உம்மென்று முகத்தை மாற்றி வைத்திருக்கிறார் என்று சிரிக்கும் இமோஜியை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

Previous articleநயன்தாராவின் கம் பேக் பற்றி பேசிய பிரபல இயக்குனர்!!
Next articleஅக்குளில் உங்களுக்கு ஓவராக வியர்க்கிறதா!! இதோ எளிமையான சூப்பர் டிப்ஸ்!!