நெசவாளர்களின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கும் விடியா அரசு! குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர்!
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தமிழக அரசு முதலில் ரூ 1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி சர்கரை மட்டும் வழங்குவதாக தெரிவித்தது.அதிமுக ஆட்சி இருக்கும் வரை தவறாமல் கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கி வரும் வேலையில் இம்முறை இவை அனைத்தையும் ஆளும் கட்சி ரத்து செய்தது.
எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கரும்பு வழங்க உத்தரவிட்டனர். அந்த வகையில் நெசவாளர்களுக்கு பயன்பெறும் வகையில் வேட்டி சேலை அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்ததையடுத்து தற்பொழுது ரத்து செய்துள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.
தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.@mkstalin @CMOTamilnadu #விலையில்லா_வேட்டிசேலை
1/2 pic.twitter.com/8K1FDXmpoF— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 29, 2022
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தரமற்ற பொருட்களை கொடுத்து நெசவு செய்ய முடியாத படி செய்து இறுதியில் இலவச வேஷ்டி சேலை என்பதையே இல்லாமல் செய்துவிட்டது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.