விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தை ’மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரித்து இருப்பதாகவும், இந்த படத்திலும் நயன்தாரா தான் ல் நாயகி என்றும் கூறப்படுகிறது
விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகிய நால்வரும் மீண்டும் இணையும் இந்த படமும் ‘நானும் ரெளடிதான்’ போலவே நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது