புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்!

0
167

புஷ்பா தயாரிப்பு நிறுவனத்தோடு விஜய் கூட்டணி… அட்லி இயக்கும் தளபதி 68… தீயாய் பரவும் தகவல்!

ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை.

அதன்பின்னர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார். இந்த படங்கள் அனைத்தும் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் வேட்டை நடத்தின. இதனால் அட்லி தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவரானார்.

இதையடுத்து ஷாருக்கானுக்காக ஒரு கதையை உருவாக்கி அந்த படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை நான்காவது முறையாக இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வாரிசு மூலமாக தில் ராஜுவுடன் இணைந்த விஜய், மீண்டும் ஒரு தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது

Previous article#BREAKING கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்து 
Next article“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!