“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!

0
62

“முதல் 5 பேருமே இப்படி இருந்தா என்ன பண்ணுவது…” இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைய சுட்டிக்காட்டிய சச்சின்!

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்திய அணி பேட்டிங் லைன் அப் குறித்து பேசியுள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் பேட்டிங் லைன் அப்பில் முதல் 5 வீரர்களில் யாருமே இடது கை ஆட்டக்காரர்கள் இல்லை. அதிலும் ஆடும் லெவனின் தினேஷ் கார்த்திக்கை இந்திய பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை ஆட்டக்காரர்கள் இல்லை என்ற சூழல் உள்ளது. இது எதிரணி பவுலர்களுக்கு அதிர்ஷ்டம் என்று சச்சின் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “எந்த சந்தேகமும் இல்லாமல் இடது கை ஆட்டக்காரர்கள் வீரர்கள் இருந்தால் அது அணிக்கு வலுவானதுதான். அப்போதுதான் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்துக்கும் பீல்டர்களை சரிசெய்ய வேண்டிய சூழல் உருவாகும்.  அப்போது எதிரணிக் கேப்டன் ஏதாவது தவறு செய்வார்.

நீங்கள் எப்போதும் ஒரு யூனிட்டாக விளையாடுகிறீர்கள், எது நன்றாக வேலை செய்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் முதல் இரண்டு அல்லது முதல் மூன்று பேரில் யாரையும் மாற்ற முடியாது. ஒரு யூனிட்டாக, உங்களிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியம், யாரை அனுப்புவது என்பதை முடிவு செய்யவேண்டும்.

பந்தை பேட்ஸ்மேன் உடல் மீது அட்டாக் செய்வதா அல்லது ஸ்டம்ப்புக்கு வெளியே அட்டாக் செய்வதா என்பதை பொறுத்து ஸ்பின்னர்களை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஆஃப் ஸ்பின்னரை தேர்வு செய்தால், அவரை ஆஃப் ஸைடில் பவுண்டரி குறைந்த தூரம் இருக்கும் எண்ட்டில் பந்துவீச செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.