மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

Photo of author

By Parthipan K

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,  தனது தோட்டத்தில் செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய்,ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார்.

தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். 

மேலும், நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு அந்த சவாலை டேக் செய்திருந்தார்.ரசிகர்கள் மத்தியில் இளையதளபதி விஜய் இந்த சவாலை ஏற்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். காத்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தோட்டத்தில் செடி நடும்புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன், இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு என பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். 

பல நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இதுதான். இதில் தளபதி விஜயின் லேட்டஸ்ட் லுக் வெளிப்பட்டுள்ள நிலையில் அதனை தளபதி ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர். நடிகர் மகேஷ்பாபு உடனடியாக “ரொம்ப நன்றி பிரதர், இந்த பசுமை இந்தியா சவாலை முன்னெடுத்து சென்றதற்கு” என்று விஜய்க்கு பதில் போட்டுள்ளார்.

சில நாட்களாக மீராமிதுன் சர்ச்சையால் கடுப்பாகி இருந்த தளபதி ரசிகர்களுக்கு இந்த போட்டோ மூலம்  உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி மாஸ்டர் பட பாடல் வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.