ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா:? இதனை இந்தியா வாங்குகிறதா? WHO ஏற்றுக்கொண்டதா?

0
46

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனவைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்யா தனது கொரோவிற்கான முதல் தடுப்பூசியை நேற்று பதிவு செய்ததுள்ளது.
இந்தகுரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? இதனை உலக சுகாதார மையம் ஏற்றுக் கொண்டதா?இந்த தடுப்பூசி இந்தியா வாங்க போகிறதா?பல்வேறு கேள்விக்கான பதில் இந்த தொகுப்பில் காணலாம்.

ரஷ்யாவின் தடுப்பூசி?


ரஷ்யாவின் பிரசிடென்ட் புட்டின் வருகின்ற ஆகஸ்ட் 12 தேதி உலகத்தின் முதல் கொரோனா தடுப்பு ஊசி பதிவு செய்யப்படும் என்று ஒரு அறிக்கையினை வெளியிட்டுருந்தார்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த தடுப்பூசியானது ஒரு நாளுக்கு முன்னரே அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதியே இந்த வேக்சினானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பிரசிடெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தடுப்பூசியானது எனது மகளுக்கு இரண்டு கட்டமாக உட்செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது.எனது மகள் உடம்பில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.இந்த தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தியின் மூலம் இரண்டு வருடங்களுக்கு கொரோனா வைரஸ் நெருங்காது.
இது மிகவும் சக்சஸ்ஃபுலான தடுப்பூசி உலகில் முதல் முதலாக பதிவு செய்யப்படுகிறதென்று பெருமிதம் அடைந்தார்.
மேலும் இந்த தடுப்பூசி -க்கு ஸ்பட்டினிக் -5(Sputnik-5)என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரசியாவின் தடுப்பூசி பாதுகாப்பானதா?

பொதுவாக ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து அதனை நான்கு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ரஷ்ய கண்டுபிடித்த தடுப்பூசியானது இரண்டு கட்ட சோதனைகளை மட்டுமே பூர்த்தி செய்துள்ளது.மூன்றாவது கட்ட சோதனை இனிவரும் காலங்களில் தான் நடத்தப்படும் என்று ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ஆனால் இதற்கு முன்னரே இந்த தடுப்பூசி பதிவுசெய்யப்பட்டு,இந்த தடுப்பூசியின் உற்பத்தி ஆரம்பித்துவிட்டது.வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் ரஷியாவின் தாமாக முன் வரும் மக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பு ஊசிகள் போடப்படும் என்று கூறியுள்ளது.

இதனை இந்தியா வாங்குமா?


ரஷ்யாவிடம் 1 பில்லியன் தடுப்பூசிகள் வாங்க 20 நாடுகளிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.இந்தியாவை பொருத்தவரையில் மத்திய அரசின் நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பு ஊசியை பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. மத்திய அரசின் நிபுணர் குழு, தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுவனங்கள், மாநில அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் இதனை ஏற்றுக் கொண்டதா?


உலக சுகாதார மையம் இரண்டு கட்ட சோதனையிலையே எப்படி தடுப்பூசியை பதிவு செய்யலாம் என்று ரஷ்யாவிடம் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது?மேலும் இதனை நாங்கள் சோதித்து பார்த்த பின்னரே உறுதி கூறுவோம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.ஆனால் ரஷ்யாவோ இதனை ஏற்கவில்லை.ஏனெனில் இது ரஷ்யாவின் பிரசிடெண்ட் மகளுக்கு போட்டு சோதிக்கப்பட்டுவிட்டது.இது கொரோனா வைரஸ் எதிராக நன்றாக செயல்படுகின்றது. இதனால் இதன் உற்பத்தியை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம். வருகின்ற செப்டம்பர் மாதம் எங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த வேக்சின் இலவசமாக வழங்கப்படும் என்று புட்டின் கூறியுள்ளார்.

author avatar
Pavithra