நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

Photo of author

By Parthipan K

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

படப்பிடிப்புத் தளத்துக்கு தினமும் வந்து காத்திருக்கும் ரசிகர்கள் குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒரு செயலை செய்யவுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது தனது மொபைல் போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்பியும் எடுத்துக் கொண்டார். அந்த செல்பி சமூக வலைதளங்களில் வைரல் ஆக, இப்போது ரசிகர்களை குஷிப்படுத்தும் இன்னொரு விஷயத்தையும் செய்ய உள்ளது படக்குழு.

படப்பிடிப்பு தளத்துக்கு தினமும் கூட்டமாக வரும் ரசிகர்களைப் படம் பிடித்து அதனைப் படத்தில் இடம்பெறும் பாடலில் வைத்துக் கொள்ளும்படி இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படத்துக்கு பயன்படுத்தும் கேமராக்களையே பயன்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தலைவா படத்தில் இதுபோல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.