மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

0
251

மூன்றாவது போட்டி:சொதப்பிய கோலி!கைகொடுக்குமா ஸ்ரேயாஸ்&ராகுல் கூட்டணி?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

இதையடுத்து பிருத்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர். இருவரும் நிதானமாக விளையாட, பிருத்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கினார். ஆனால் 40 ரன்களில் இருந்த போது அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ராகுல் ஸ்ரேயாஸ் ஐயரோடு இப்போது களத்தில் விளையாடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை சேர்த்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Previous articleஒட்டகத்தில் ஊர்வலம் வந்த மணமகன் கையில் சிஏஏ எதிர்ப்பு பதாகை: கேரளாவில் பரபரப்பு
Next articleநெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here