முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்!

0
97

முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் இமாலய வெற்றிதான்.

அதன் பின்னர் விஜய்யோடு கூட்டணி அமைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களின் மூலம் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரானார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. விமர்சன ரீதியாகவும் கழுவி ஊற்றப்பட்டது. இதனால் அடுத்து அவர் இயக்க இருந்த விஜய் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் இப்போது சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 1947 என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க பொன் குமார் இயக்கியுள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்து படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.