இன்று சென்னையில் இருக்கக்கூடிய பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவானது கொண்டாடப்பட இருப்பதால், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு பிரசாந்த் கிஷோர் அவர்கள் வந்து இறங்கியது திமுகவை கதி கலங்க வைப்பதாக அமைந்திருக்கிறது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக பிரஷாந்த் கிஷோரின் வியூக அமைப்பானது இருந்தது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரசாந்த் கிஷோர் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு வியூகம் வகுப்பது குறித்தும் தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிப்பது குறித்தும் ஏற்கனவே தங்களுடைய சந்திப்பில் பேசி இருக்கின்றனர்.
இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது என்பது திமுகவிற்கு சற்று அச்சுறுத்தல் ஆகவே அமைந்திருக்கிறது. இன்று நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உடன் ஒன்றாக மேடையில் பிரசாந்த் கிஷோர் அவர்கள் தோன்ற போவதாகவும் அதுமட்டுமின்றி விஜயினுடைய ரசிகர்கள் மற்றும் வாக்காளர்களிடம் பிரசாந்த் கிஷோர் அவர்கள் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கின்றன.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமான வேலைபாடுகளில் இறங்கியுள்ள நிலையில், அரசியலில் புதிதாக நுழைந்த தமிழக வெற்றிக்கழகமானது அனைத்தையும் புதிதாகவும் திறம் படவும் கற்று செயல்படுத்தி வருவது தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தை சற்றே அசைத்துப் பார்க்கக் கூடியதாக அமைந்துள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு மேலும் உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் உடைய பிரச்சார வியூக வகுப்பாளர் தற்பொழுது தவெகவிற்கு துணை நிற்பது அவர்களின் உடைய பயத்தை இன்னும் அதிகரிப்பது போன்று மாறி இருக்கிறது.