ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமாவளவன்!! மூன்று நாள் சண்டை மூன்றாவது  நாள் சமாதானம்!!

Photo of author

By Vijay

Politics: கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொண்ட விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.

தமிழக வெற்றிக்  கழக மாநாட்டுக்கு பின் தவெக  தலைவர் விஜய் விஜய் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்நிலையில் டிசம்பர் 6ம்  தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தவெக தலைவர் விஜய் மற்றும் விசிக தலைவர் விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் அக்டோபர் 27 ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலாக கலந்துகொண்ட இந்த மாநாடு கோலாகலமாகவும், கொண்டாட்டமாகவும் நடைபெற்று முடிந்தது.

இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதே நேரத்தில் பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி ஆகியவற்றை ஏற்று தங்கள் கட்சி கொள்கையாக இருக்கும் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து திராவிடமும், தமிழ் தேசியமும் எனதிரு கண்கள் என கூறியிருந்தார் விஜய்.

இதுகுறித்து பல விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கூறுகையில் விஜய் யின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என்று கூறினார். மேலும் பாஜக வினர், திமுக வினர் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு படி மேலே சென்று திருமாவளவன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

வரும் டிசம்பர் 6ஆம் தேதி  சென்னையில் பிரபல இதழ் ஒன்றின் சார்பாக  விழாவில் அம்பேத்கர் குறித்து  புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவர், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளனர். மேலும் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் பெற்று கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.