“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

0
92

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் உலகளவில் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளைப் படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி படத்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் தன்னுடைய ஸ்டுடியோ 9  நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா “மைக் டைசனுடன் இந்த படத்தில் நடித்தது மறக்க முடியாது. ஒரு நாள் தவறுதலாக அவர் என் முகத்தில் குத்திவிட்டார். ஒரு நாள் முழுவதும் நான் வலியால் துடித்தேன். நோட்டா படத்துக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடிக்க வில்லை. எனக்கு பிடித்த இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித், லோகேஷ். அவர்கள் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.