“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

0
227

“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

வாரிசு படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.

விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக  வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் வெளிநாட்டில் வசிக்கும் ஆப் டெவலப்பராக நடிக்கிறாராம். மேலும் அவரின் கதாபாத்திரத்துக்கு ‘விஜய் ராஜேந்திரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வில்லு படத்துக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த கூட்டணியில் வெளியான கில்லி, சிவகாசி, போக்கிரி ஆகிய படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ள பிரகாஷ் ராஜ் “செல்லத்தோட  நடிச்சு (விஜய்) மிகப்பெரிய கேப் ஆகிருச்சு. படத்தோட கதைய சொல்லக் கூடாது. ஆனால் நாங்க திரும்ப வந்துட்டோம்னு சொல்லலாம்” எனக் கூறியுள்ளார்.

Previous article“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு
Next article“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here