திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் பட நடிகை! விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

Photo of author

By Sakthi

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் பட நடிகை! விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

Sakthi

Updated on:

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் பட நடிகை! விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை

திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விஜய் பட நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் அந்த நடிகை குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகிறார்கள்.

மாசிலாமணி, சமர், காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, வம்சம், ரெஜினா, டிராப் உள்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுனைனா. இவர் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

சமூகவலைதள செயலியான இன்ஸ்டாகிராம் செயலியிலும் பிசியாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். மேலும் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார்.

இந்நிலையில் நேற்று(அக்டோபர்21) இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது நடிகை சுனைனா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்தது தான் ரசிகர்கள் அதிர்ச்சியடைய காரணம்.

நடிகை சுனைனா அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்புகளில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நடிகை சுனைனா அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகிறார்கள்.