அடிமேல் அடி வாங்கும் விஜய்!! ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் ஐடி ரைட்!!

Photo of author

By Gayathri

அடிமேல் அடி வாங்கும் விஜய்!! ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் ஐடி ரைட்!!

Gayathri

Vijay gets beaten up!! ID right on Janyayan shooting set!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஒரு புறம் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் ஒருபுறம் என இரண்டையும் சரியான திட்டங்களை வகுத்து பின்பற்றி வருகிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்.

அரசியல் களம் காண இருக்கும் இவர் தன்னுடைய கடைசி திரைப்படத்தை விரைவாக முடிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தற்பொழுது ஜனநாயகன் திரைப்பட தளத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டு தற்காலிகமாக ஜனநாயகம் திரைப்பட சூட்டிங் ஆனது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது சினிமா துறையில் ஏற்படக்கூடிய சிக்கலா அல்லது அரசியல் ரீதியாக விஜய் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிக்கலா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது பனையூரில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென FEFSI தலையிட்டு அதனை நிறுத்தி இருக்கிறது. திரைப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு 22 நாட்களாக ஊதியம் கொடுக்கவில்லை என்றும் இவ்வளவு நாட்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது தவறான செயல் என்றும் FEFSI அமைப்பு தலையிட்டு படப்பிடிப்பு தளத்தை நிறுத்தி இருக்கிறது.

மேலும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் முன்பு பிரெஸ்டிஜ் நிறுவனத்தோடு இணைந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டதாகவும் இப்பொழுது prestig-லிருந்து பிரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க பிரெஸ்டிஜ் நிறுவனத்தில் ஐடி ரைட் நடத்தப்பட்டதை அடுத்து அதனுடன் இணைந்து பல தொழில்களை மேற்கொண்ட கே வி என் நிறுவனத்திற்கும் ஐடி ரைட் நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளதால் விஜய் அவர்கள் கலக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.