ஓட்டளிக்க வந்து சிக்கலில் சிக்கிய விஜய்.. போலீசுக்கு பறந்த புகாரால் பரபரப்பு..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் இந்த தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை மாறாக 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் இப்போது முதலே கட்சி பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இதற்கிடையில் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்தார். எனவே தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யவில் இருந்து அவசர அவசரமாக நேற்று காலை சென்னை வந்த விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அவரின் வாக்கைப்பதிவு செய்தார். அப்போது அவரை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் அங்கு கூட்டம் அலைமோதியது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விஜய்யை பத்திரமாக அவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஜய் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “நடிகர் தேர்தலில் ஓட்டளிக்க 200க்கும் அதிகமானவர்களுடன் வந்திருந்தார். இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் இப்படி கூட்டமாக வருவது விதிமீறல். எனவே நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.