ரோபோ சங்கர் எடுத்த அடுத்த அவதாரம்:

0
256

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருபவர் போஸ் வெங்கட். இவர் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் போஸ் வெங்கட் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். கன்னிமாடம் என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தில் கார்த்திக் சுப்பாராஜின் தந்தை கஜராஜ் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹரிசாய் ஒரு பாடலை கம்போஸ் செய்ததாகவும் இந்த பாடலை நடிகர் ரோபோ சங்கர் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரை பாட வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

இது ஒரு ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் முதன் முதலாக ஒரு பாடலைத்தான் பாடி உள்ளதாகவும் அந்த பாடல் அனைவரையும் கவரும் என தான் நம்புவதாகவும் இந்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர் பாடிய பாடல் எப்படி உள்ளது என்பதை இன்று மாலை என்று பார்ப்போம்

Previous articleரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!
Next articleஅதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here