Skip to content
- விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர்.
- இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு மேல் வந்து தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொள்ளுமார் கூறினார். அவர்களை பார்த்த பொது மக்கள் அவர்களை பார்த்து பாராட்டினர். அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. மூதாட்டிகளை வரவேற்ற கட்சியில் உள்ள இளைஞர்கள், “தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று,” என்றும் “திராவிட இயக்க ஆட்சிகள் மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை” என்றும் கூறினர்.
- 100 மேற்ப்பட்ட மூதாட்டிகள் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராய் இணைந்த நிலையில் தமிழக மக்களுக்கு மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர் என்று கூறிய மூதாட்டிகளை நாங்கள் மனதார வாழ்த்தி வரவேற்கிறோம் என அந்த மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.