1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா?

0
296
Vijay meets 1500 students!! Is it due to political interference?
Vijay meets 1500 students!! Is it due to political interference?

1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா?

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானபோதே முதல் இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டியதோடு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள சிறந்த மாணவர்களை சந்திப்பதாகவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.  இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

10, 11 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு வரும் ஜூன் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை தொடங்கி அரசியலில் இறங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் அவரது 70வது படத்தை முடித்து விட்டு அரசியலில் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

அவர் அரசியலில் இறங்கினால் திருச்சியில் மாநாடு நடத்தி அவரது அரசியல் பிரவேசத்தை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரின் அரசியல் பிரவேசத்திற்காக விஜயின் மக்கள் இயக்கமும் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே மாணவர்களை சந்தித்து பேசி, அவர்களின் கல்விக்கு நிதியுதவி அளிக்க போவதாகவும் தெரிகிறது.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர் இல்லாமல் படிக்கும் மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்குவார் என தெரிகிறது. இதகாக விஜய் மக்கள் இயக்கம் மாணவர்களின் பட்டியலை தலைமைக்கு அனுப்பி உள்ளது. இந்த சந்திப்பு நடைபெறுவதற்காக நான்கு இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளனர். ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. திருமண மண்டபம், புழல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் என நான்கு இடங்களில் ஒரு இடத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.

Previous articleடாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!
Next articleசிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?