தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

0
123

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார்.

இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்கவில்லை எனவும் இந்த படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு கூறியதாக படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளது. இது விஜய்க்கு 66-வது படம் ஆகும். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. அதை தொடர்ந்து, தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டு இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை மேலும் சில வாரங்களுக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தற்போது கதாநாயகி உள்ளிட்ட இதர நடிகர் – நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleஐபிஎல் தொடர் எங்கு நடக்க போகிறது? சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி!
Next articleரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!