தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!!
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் அளவிற்கு ஹிட்டான படம் தான் கில்லி. இது தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக சில மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதனால் தான் இந்த படத்தை இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த படத்தின் ஸ்பெஷலே இதில் நடித்த நடிகர் நடிகைகள் அதிலும் குறிப்பாக விஜய்யின் அம்மாவாக தனது வெகுளித்தனமான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருந்த நடிகை ஜானகி கணேஷ் மற்றும் விஜய்யின் தங்கையாக நடித்திருந்த நடிகை நான்சி ஜெனிஃபரின் காமெடியும் தான். இவர்கள் தவிர நடிகை த்ரிஷாவும் ஒரு முக்கிய காரணம்.
இவர்கள் இருவரின் ஜோடி கில்லி தொடங்கி இறுதியாக வெளியான லியோ வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜானகி குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜானகி நடிகர் விஜய்யை விட இளையவராம். எத்தனை வயது இளையவர் தெரியுமா?
நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர். அதேபோல நடிகை ஜானகி கணேஷும் 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்துள்ளார். இவர் நடிகர் விஜய்யை விட வெறும் 3 மாதங்கள் தான் இளையவர். இருந்தாலும் விஜய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
கில்லி படம் வெளியான சமயத்திலேயே 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள கில்லி படம் இன்றும் வசூலில் தூள் கிளப்பி வருகிறது. வெளியான 2 நாளில் ரஜினியின் லால் சலாம் படத்தின் மொத்த வசூலையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.