தேமுதிக-திமுக கூட்டணி குறித்து பதிலளித்த விஜய பிரபாகரன்.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பாராட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேமுதிக அதே எழுச்சியோடு தான் செயல்படுகிறது. வெற்றி, தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம் என்றார்.

ஆனால், வாக்கு சதவீதம் இன்னும் குறையவில்லை, அப்படியேதான் உள்ளது. தொண்டர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். எங்களது லட்சியத்தை நோக்கி பயணிப்போம். இதையடுத்து பேசிய அவர் கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் பழைய நிலைக்கு திரும்ப சிறிது நாட்களில் வந்துவிடுவார். எங்களால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறோம்.

மக்களை சந்திக்க வேண்டிய சமயத்தில் விஜயகாந்த் சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்று பாராட்டு தெரிவித்தார். மேலும், மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக உடன் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment