மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்!

Photo of author

By Parthipan K

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்!

Parthipan K

Vijay Sethupathi apologized to the biggest celebrity! The facts he broke in the interview!

மிகப்பெரிய பிரபலத்திடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! பேட்டியில் அவரே போட்டு உடைத்த உண்மைகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சமீப காலமாக வில்லன் ரோலில் தான் நடித்து வருகின்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.மேலும் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஹிந்தி படம் தான் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஆகிய வரும் நடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில்  விஜய் சேதுபதி கூறுகையில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. நடிகர் சாருக்கான் ஒரு நல்ல மனிதர் இந்த படத்தின் முதல் நாள் சூட்டிங் அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து பயந்து கொண்டே சென்றேன் ஆனால் அவர் என்னை மிக இயல்பாகவே நடத்தினார். தொடர்ந்து பல விஷயங்கள் குறித்து நான் அவரிடம் பேசினேன் அவர் ஜென்டில்மேன் என்றும் பாலிவுட் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக காட்டிக் கொள்ளாமல் மிக இயல்பாகவே என்னிடம் நடந்து கொண்டார் என கூறினார்.

ஒரு சில சமயங்களில் நான் ஷாருக்கானிடம் அதிகமாக பேசிய அவரை தொந்தரவு செய்கிறேன் என நினைத்து அவரிடம் மன்னிப்பு கேட்டேன் ஆனால் அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று கூறினார் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.