தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!!

Photo of author

By CineDesk

தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!!

எளிமை மற்றும் சிரிப்பு என்று கூறினாலே நினைவிருக்கு வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் 55 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் புதுப்பேட்டை மற்றும் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பங்கு பெற்றார். மேலும் அடுத்தடுத்து நடித்த படங்களிலேயே கதாநாயகனாக மாறி மக்களின் செல்வனாக அன்புடன் அழைத்து வந்தார். மேலும் இவரின் எளிய குணத்திற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இளம் தலைமுறையினர் கூட இவரைப் போல் தான் வாழவேண்டும் என்றும் இவரை எடுத்துக்காட்டாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் தற்போது விஜய் சேதுபதி  சில நாட்களாகவே ஏதாவது ஒரு காரணத்திற்காக அடிக்கடி அவரைப் பற்றிய பேச்சு வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு  பதில் அளித்துள்ளார். அந்த கேள்வி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த 65 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு விஜய் சேதுபதி அவர்கள் இந்த 65 நாட்கள் அரசியல் மிகவும் நன்றாக உள்ளது எந்த ஒரு குறையும் இல்லை மேலும் என்னை சுற்றியுள்ளவர்கள் மற்றும் எனக்கு தெரிந்த யாரும் இந்த 65 நாட்கள் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறவில்லை என்று தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சன் தொலைக்காட்சி நடத்தும் சமையல் போட்டி ஒன்றினை தொகுத்து வழங்க உள்ளார். அதை பற்றிய ப்ரோமோக்கள் சில வாரங்களாகவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஒளிபரப்பு வாங்கி வருகிறது. மேலும் விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியை ஒரு தொகுப்பாளராக பார்க்க அவரின் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.