பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு! மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா?

0
81

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட காலங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தண்டனை காலம் முடிவு பெற்றதை அடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.இதற்கிடையில் 2017 ஆம் வருடம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த சமயத்தில் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் கையூட்டு கைமாறி இருப்பதாகவும், தெரிவித்து டிஜிபியாக இருந்த சத்தியநாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்டோர் மீது காவல்துறை அதிகாரி ரூபா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினைக்குமார் தலைமையில் விசாரணை குழு அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த குழு சிறையில் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் தீவிர விசாரணையை ஆரம்பித்தது.அதன் பின்னர் அந்த குழு சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், தெரிவித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்து பெங்களூருவில் லஞ்ச தடுப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த வழக்கில் நான்கு வருட காலங்கள் ஆகியும் ஊழல் தடுப்பு படை காவல் துறையினர் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தால் இதனை தொடர்ந்து சென்னையை சார்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.அதில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாகவும் வழக்கு விசாரணையை செய்து கொண்டிருந்த ஊழல் தடுப்பு காவல் துறையினர் அந்த விசாரணையை தாமதமாக நடத்தி வருவதாகவும், இந்த வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை மிக விரைவில் முடிக்குமாறு ஊழல் தடுப்பு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதோடு இந்த மனு விசாரணையின்போது கர்நாடக நீதிமன்றம் விசாரித்த வரையில் இருக்கின்ற தகவல்களை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்ட உரையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.