மீண்டும் வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…!

0
129

மீண்டும் ஒரு வில்லன் வேடம் எடுக்கும் விஜய் சேதுபதி… இந்தமுறை பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு…!

நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது போல குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன், கௌரவ வேடம் என கலந்துகட்டி கலக்கி வருகிறார். ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றன. தமிழில் ரஜினி, விஜய் மற்றும் கமல் ஆகியோருக்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தெலுங்கில் உப்பெண்ணா திரைப்படத்திலும் வில்லனாக கலக்கினார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒருமுறை வில்லன் வேடம் ஏற்க உள்ளார். ஆனால் இந்த முறை பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கானுக்கு எதிராக. அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த வேடத்தில் பாகுபலி புகழ் ராணா நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே இப்போது விஜய் சேதுபதி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.