அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

0
96
A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!
A school student survived in Nuninodi due to the negligence of government transport officials!

அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் நுனிநோடியில் உயிர்தப்பிய பள்ளி மாணவன்!

தமிழகத்தில் கல்வியில் பின் தாங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. தற்போது சில ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகே உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் போன்ற நகர பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தினமும் அரசு பள்ளிகளில் நகர பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்களும் பேருந்தில் பயணம் செய்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை வேலையில் அரசு பள்ளியில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. பல கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகிறது.

இதனால் பள்ளிக்குச் செல்லும்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போதும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் முந்தி அடித்து ஏறி, படியில் தொங்கி செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.விழுப்புரம் பழைய நிலையத்தில் இருந்த பில்லூர் சென்ற அரசு பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் படியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தான்.

கொஞ்சம் அசந்தாலும் உயிரிழப்பு  அபாயம் ஏற்பட்டிருக்கும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கலெக்டர் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

கடந்த கல்வியாண்டில், விழுப்புரத்தில் அரசு பஸ்சில் ஆய்வு செய்த கலெக்டர் மோகன் அதிக அளவு மாணவர்கள் வரும் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை

இதனால் மாணவர்கள் உயிர் ஆபத்து ஏற்பட நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது பேசிய கலெக்டர் அரசு பள்ளிகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை கண்காணித்து தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் இந்த உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளன.

 

author avatar
CineDesk