பாலிவுட்டில் தனது நடிப்பை செதுக்கும் விஜய் சேதுபதி!! வைராலாகும் “ஜாவான்” படத்தின் போஸ்டர்!!
நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும்.
ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். மேலும் இவர் தற்பொழுது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார்.
இவ்வாறு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வருகின்ற விஜய் சேதுபதி தற்பொழுது வில்லன் ரோலில் கலக்கி கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாக்கி கொண்டுள்ள ஜாவான் படத்திலும் வில்லனாக நடித்து வருகின்றார்.இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் பிரியாமணி ,நயன்தாரா ,தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தில் ஷாருக்கான் அவர்கள் இரண்டு வேடத்தில் தனது நடிப்பை வெளிபடுத்தி உள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பாலிவுட்டிலும் தனது நடிப்பை செதுக்கி கொண்டு வருகின்றார்.ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் படத்தின் போஸ்டர் வேலைகள் இன்னும் உள்ளதால் செப்டம்பர் 7 ம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு கூறியுள்ளது.இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.