முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

Photo of author

By Parthipan K

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

கர்நாடக முன்னாள் முதலமைச்சரின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த வரிசையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசுப் பொருளாகியுள்ளது.

சித்தராமையா வாழ்க்கை படத்தை வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வந்தால் வெற்றிபெற வாய்ப்பாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.