தவெக தலைவர் விஜய் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களை நியமித்து,கட்சியின் அடிப்படை அம்சங்களை கட்டமைப்பு செய்து கொண்டிருந்தார். எனினும் பலரும் அவரை வீட்டில் இருந்தே அரசியலில் ஜெயிக்க முடியாது. வெளிவந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்ற வகையில் பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து அட்வைஸ் செய்து வந்திருந்தனர். பனையூரில் அலுவலகத்தை தொடங்கி, முதல் கட்ட மாநாட்டின் மூலம் கட்சிக்கொடி, கட்சியின் பெயர் ஆகிவற்றை வெற்றிகரமாக வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து சில மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சி அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின் பரந்தூர் மக்களை சந்தித்து அங்குள்ள பிரச்சனையை நேரில் கேட்டு அறிந்தார். அதற்கு பலதரப்பட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. மீண்டும் கட்சியில் அடுத்த கட்ட மாவட்ட செயலாளர்களை அறிமுகம் செய்து அவர்களை நம்பிக் கட்சி தொடங்கி இருப்பதாக கூறியிருந்தார். தற்சமயம் மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் களப்பணியில் ஈடுபட போவதாக தகவல்கள் கசிந்திருந்தன. விஜய் என்கின்ற புலி பதுங்கி கொண்டே இருக்கின்றது என பல ஆர்வலர்களும் யோசித்து வந்தனர். ஜனவரி 10 நேற்று தேர்தல் வியூகம் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்சமயம் தவெக கட்சி நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர், தவெக மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் புலி பதுங்குவது பாய்வதற்கே!! என்று வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.