விஜய் – ஸ்டாலின் – ரஜினி ஒரு பிரேமில்! அடுத்ததாக எடப்பாடியுடன் பேச்சு!! விஜய்க்கு எதிராக புதிய வியூகமா?

சென்னையில் நடைபெற்ற காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சினிமா பிரபலங்களின் கொண்டாட்டமாக மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விழாவில் அரங்கேறிய சில சந்திப்புகள்தான் தற்போதுபேசும் பொருளாகியுள்ளது.
முதலில், விஜய், மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள், ஒரே பிரேமில் இத்தனை முக்கிய முகங்களா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கிடையே மற்றொரு புகைப்படமும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து உரையாடிய காட்சிதான் அது.இங்கேதான் அரசியல் ட்விஸ்ட் ஆரம்பமாகிறது.

விஜய் – ஸ்டாலின் – ரஜினி சந்திப்பு.. மறுபுறம் ஸ்டாலின் – எடப்பாடி – ரஜினி சந்திப்பு:

தமிழக அரசியலில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்ட முக்கிய முகங்கள் ஒரே திருமண நிகழ்ச்சியில் சந்தித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக அரசியல் போட்டிகள், விமர்சனங்கள் என களம் பரபரப்பாக இருக்கும் சூழலில், தலைவர்கள் இப்படி இயல்பாகச் சந்தித்துப் பேசுவது பல கேள்விகளை எழுப்புகிறது.இது வெறும் குடும்ப நிகழ்ச்சியில் நடைபெற்ற சந்திப்புதானா? அல்லது அரசியல் வேறுபாடுகளுக்கான புதிய பாதையா என்று கேள்வி எழுந்துள்ளது.தற்போது 6 தொகுதிகளில் தேர்தல் நடக்க போவதையடுத்து விஜய்யை வீழ்க்க புதிய திட்டத்தை வியூகிக்க கூடும் என்று பலரும் கூறுகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய் பதவி ஏற்பதற்கு முன்பாகவே திமுக அதிமுக இணையப்போவதாக ஒரு செய்தி தீயாக பரவியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தப் புகைப்படங்களை வைத்து கூட்டணி மாற்றம், ரகசியப் பேச்சுவார்த்தை என்று முடிவெடுக்க முடியாது. அடுத்தடுத்த இரு கட்சிகளின் நகர்வுகளை வைத்து தான் முடிவெடுக்க முடியும்.