சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, தற்போது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் பங்கேற்ற இந்த விழாவில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ஒரே ஒரு காட்சிதான்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உரையாடிய புகைப்படங்கள் இன்றைய ஹாட் டாப்பிக்.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுகவும் அதிமுகவும் நீண்டகால அரசியல் போட்டியில் இருந்து வருகின்றன. தேர்தல் களத்தில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு வருகின்றன.ஆனால் அரசியல் மேடைகளில் காணப்படும் இந்தப் போட்டி, தனிப்பட்ட பொது நிகழ்ச்சிகளிலும் தொடர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதுபோன்ற சந்திப்புகள் உணர்த்துகின்றன.
ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்ட காட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூக உறவுகளையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் தருணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் பல்வேறு காலகட்டங்களில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியும் நீண்டகாலமாகப் பேசப்பட்டது.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் அரசியல் தலைவர்களுடன் இயல்பாக உரையாடிய காட்சி, மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.இருப்பினும், இந்தச் சந்திப்பை வைத்து ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது.
இந்தச் சந்திப்பைப் பார்த்ததும் பலருக்கும் எழும் கேள்வி இதுதான். 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது.ஸ்டாலின் – எடப்பாடி சந்திப்பு ஏதேனும் அரசியல் சமிக்ஞையா? ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் ஏதேனும் புதிய அரசியல் நகர்வுக்கு அடையாளமா? என்ற கேள்வி தான் அனைவரது மனதிலும் தோன்றியது. தற்போதைய தகவல்களின் அடிப்படையில் அப்படியொரு முடிவு ஏதும் எடுக்கவில்லை என்றே கூறுகின்றனர் .
இது காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற சந்திப்பு மட்டும் தான். அரசியல் என்பது தேர்தல், பிரசாரம், விமர்சனம், எதிர்ப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டதல்ல.அரசியல் தலைவர்களுக்கிடையே தனிப்பட்ட சந்திப்புகளும் பொது நிகழ்ச்சிகளில் மரியாதையுடன் பழகுவதும் ஜனநாயக அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தப் புகைப்படம் அரசியல் கூட்டணியையோ புதிய அரசியல் முடிவையோ உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அரசியல் எதிரிகளும் ஒரே மேடையில் சந்தித்து உரையாட முடியும் என்பதைக் மக்களுக்கு முன் உதாரமாக திகழ்கிறது.