மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் மரணம்! கதறும் பிரபலங்கள்!

கொரோனாவால் பல பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை இந்த கொரோனா ஆட்டிப் படைத்து கொன்று குவித்து வருகிறது.விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சியில் நடித்து வந்த நெல்லை சிவா மரணமடைந்த நிலையில் மற்றுமொரு சீரியலில் நடித்து வரும் விஜய் டிவி பிரபலம் உயிரிழந்துள்ளார்.

தேன்மொழி பிஏ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலினுக்கு  அப்பாவாக நடித்த குட்டி ரமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குட்டி ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவு அனைத்து பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மறைவுக்கு ஜாக்குலின் சோகமான இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தொடர்பாக பேட்டி எடுக்க யாரும் என்னை அழைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

https://www.instagram.com/p/CO1zAbABWrd/?igshid=1km5cgpucylyv

Leave a Comment