ஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!

Photo of author

By Vijay

ஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!

Vijay

Vijay TV serial actress who gets salary in lakhs only per day..!!

ஒரு நாளைக்கு மட்டும் லட்சங்களில் சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..!!

வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை விட சின்னத்திரை நடிகர் நடிகைகள் அதிக சம்பளம் வாங்கி வருகின்றனர். ஏனெனில் ஒரு சீரியல் குறைந்தது 800 எபிசோடுகளாவது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு 20ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள். 

இந்நிலையில், விஜய் டிவி சீரியல் நடிகை தான் லட்சங்களில் சம்பளம் வாங்கி வருவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். 

ரேஷ்மா சின்னத்திரை மட்டுமல்ல வெள்ளிதிரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடிகர் சூரியின் மனைவியாக ரேஷ்மா நடித்திருப்பார். அந்த காமெடி காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ரேஷ்மாவிடம் உங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரேஷ்மா, “நான் ஒரு நாளைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கி வருகிறேன். என்னிடம் வேலை பார்க்கும் உதவியாளரே மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார்” என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர்.