விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பு!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பு!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும்.

இப்பொழுது இன்னும் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் கோபி தான் கட்டிய வீட்டை விட்டு பாக்கியாவை வெளியேற சொன்னதும் அதற்கு பாக்கிய அந்த வீட்டிற்கான பணத்தை முழுவதும் தரப்  போவதாக கூறி இருந்தார்.

அதற்காக பாக்கியாவிற்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்த கோபி,அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பாக்கியா.  இனிமேல் ராதிகா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளார்.இனி பாக்கியவிற்கு என்னவெல்லாம் நடக்க போகின்றது என்பதை வரும் தொடர்களில் காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இது போன்ற இந்த சீரியலில் அதிரடி காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறர்கள். மேலும் இந்த சீரியல் TRB யில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சிவ சேகர், டேவிட் இயக்க ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டு வருகிறது. மேலும் தெலுங்கில் INTITI GHURU LAKSHMI என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அத்தகவல் ரசிகர் இடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.