விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!

Photo of author

By Vinoth

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!

விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இயக்குனர் வம்சியின் உடல்நிலைக் காரணமாக நிறுத்தப்பட்டது.

விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

விறுவிறுப்பாக நடந்து வரும் ’வாரிசு’ படப்பிடிப்பை வம்சி நடத்தி வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒரு குறுகிய பிரேக் எடுத்துக் கொண்டு விஜய் உடனடியாக லோகேஷ் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு இயக்குனர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரகாலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது நாளை முதல் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் மட்டும் படமாக்கப் பட வேண்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. வேகமாக இந்த படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.