ராகுல் காந்தியின் தகுதி நீக்கம்!மத்திய அரசை கண்டித்து விஜய் வசந்த் எம் பி பிரச்சார நடைபயணம்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்பி பிரச்சார நடை பயணம் – மத்திய பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்து பெரிய எழுச்சியான புதிய இந்தியா உருவாகும் என பேட்டி.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஐ எம் பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து , நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்தும் , பாஜகவின் தேர்தல் அறிக்கைகளை உடனே நிறைவேற வலியுறுத்தியும் , மக்களை பாதித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் பெருவிளை பகுதியில் விஜய் வசந்த் எம்பி பிரச்சார நடை பயணம் மேற்கொண்டார்.
பல்வேறு வீதிகளில் காங்கிரஸ் கட்சியினருடன் சேர்ந்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ,இன்று துவங்கிய இந்த பிரச்சார பயணம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த் பேட்டி அளித்தார் அதில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது , மத்திய பாஜக அரசின் சர்வாதிகார போக்கிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்து பெரிய எழுச்சியான புதிய இந்தியா உருவாகும் என கூறினார்.